Tuesday, August 24, 2010

ரைட் க்ளிக் எத்தனை முறை


புரோகிராம்களை இயக்க மவுஸின் இடது பட்டனைக் கிளிக் செய்கிறோம். அதே போல நாம் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு செயல்பாடு மவுஸின் வலது பட்டனைக் கிளிக் செய்வது. இதனால் வித்தியாசமான மெனு ஒன்று கிடைக்கும். 


எடுத்துக்காட்டாக,   டெஸ்க்டாப்பில் புதிய போல்டர் வேண்டுமா? ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் சென்று புதிய போல்டரைத் தயார் செய்கிறோம்.  பைல்களின் பெயர்கள் மீது ரைட் கிளிக் செய்து அதனை அழிக்கிறோம்; 


காப்பி செய்கிறோம்; சேவ் செய்கிறோம்; மறு பெயர் கொடுக்கிறோம். டெக்ஸ்ட் மற்றும் படங்களைத் தேர்வு செய்து அவற்றையும் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளுக்கும் உட்படுத்துகிறோம். இது ஒரு சில தான். எத்தனையோ செயல் பாடுகளுக்கு நாம் ரைட் கிளிக்கினைத்தான் சார்ந்திருக்கிறோம். 


 மவுஸில் மேற்கொள்ளும் இந்த ரைட் கிளிக் பயன்பாட்டினை, கீ போர்டு வழியாகவும் மேற்கொள்ளலாம்.    Shift + F10 என்ற பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ரைட் கிளிக் மெனு உங்களுக்குக் கிடைக்கும்.


  

1 comments:

Kumaresan Rajendran said...

good post,

Post a Comment