சர்வதேச அளவில் விலையுயர்ந்த ஆபரணமாக பிளாட்டினத்திற்கு அடுத்தபடியாக உள்ளது வைரம்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வைரத்தை, கம்ப்யூட்டர் தயாரிக்க பயன்படும் பகுதிப் பொருளாக பயன்படுத்த இருப்பதாகவும், இதுகுறித்த பணிகள், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள கம்ப்யூட்டர்களில், சிலிக்கான்களே முக்கிய பகுதிப்பொருட்களாக உள்ளதாகவும், வைரத்தை பகுதிப்பொருளாக உருவாக்கும் பட்சத்தில், தற்போது கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கப்படும் அளவைவிட, பன்மடங்கு அதிகம் சேமித்து வைக்கும் திறனைப் பெற முடியும் என்றும், அதுமட்டுமல்லாமல, செயலாற்றும் விதமும் (வேகம்) பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த ஆய்வு, பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருவதாகவும், ஆனால், தற்போது தான் அது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment