Wednesday, August 25, 2010

வேர்ட் டிப்ஸ்



ஆவணத் தேதியைத்  தானாக மாற்ற  வேர்ட் தொகுப்பில் ஆவணங்களை உருவாக்குகையில், அதில் உள்ள தேதியினை, பயன்படுத்தும் நாளுக்கேற்றபடி அமைக்க விரும்புவோம். எடுத்துக் காட்டாக, ஒரு கடிதம் பலரை வெவ்வேறு நாட்களில் சென்றடைய வேண்டியதிருக்கலாம்.




இது ஒரே நாளில் அச்செடுத்து அனுப்பப்படாமல், பல நாட்களில் அனுப்பப் படலாம். அப்போது தேதியை, அந்த அந்த நாளில் திருத்தாமல், தானாகவே வேர்ட் அன்றைய தேதிக்கு மாற்றிக் கொள்ளும்படி அமைத்துவிடலாம். இதற்கான வழிகளைப் பார்ப்போம். இங்கு ஆவணம் அல்லது அதற்கான டெம்ப்ளேட் என்று சொல்லப்படும் கட்டமைப்பில் இந்த மாற்றத்திற்கான வழிமுறையினை மேற்கொள்ளலாம். 


1. கர்சரை ஆவணத்தின் எந்த இடத்தில் தேதி தானாக மாற வேண்டுமோ அங்கு அமைக்கவும். 


2. அடுத்து  Insert | Date And செல்லவும்.


3. Available Formats என்ற பெட்டியிலிருந்து, தேதி எந்த வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த எடுத்துக் காட்டுக்களில், நீங்கள் என்று இதனை அமைக்கிறீர்களோ, அந்த தேதி காட்டப்படும். இதே தேதி தான் அமைக்கப்படுமோ என்று குழப்பமடைய வேண்டாம்.  விருப்பப்படும் வகையிலான வடிவத்தினைத் தேர்ந்தெடுக்கவும். 


4. பின்னர், Update Automatically  என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இங்கு தேதி, தேதியாக அமைக்கப்படாமல் ஒரு பீல்டாக அமைக்கப்பட்டுள்ளது. (இந்த பீல்டு குறியீடு எப்படி அமைக்கப் பட்டுள்ளது என்று அறிய, சிறிது நிழல் படிந்தாற்போல் இருக்கும் இதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Toggle Field Codes என்பதில் கிளிக் செய்து பார்க்கவும்.) இனி ஒவ்வொருமுறை, இந்த ஆவணத்தைத் திறக்கும்போதும், அச்சடிக்கும் போதும், இந்த இடத்தில், அன்றைய நாளுக்கான தேதி, நீங்கள் தேர்ந்தெடுத்த வடிவத்தில் கிடைக்கும்.


இதற்கு மாறாக, இந்த இடத்தில் ஒரே தேதி தான் வேண்டும் என விரும்பினால், மீண்டும் மேலே சொன்னபடி சென்று, செட் செய்து  Update Automatically  என்ற பெட்டிக்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீ பயன்பாடு
Alt V, H – ஹெடரில் உள்ளதனைப் பார்க்க. பேஜ் லே அவுட் வியூவில் ஹெடரைக் காட்டும்
Alt V, N– இது சாதாரணமான(Normal) அடிப்படைத் தோற்றத்தைக் காட்டும். இதே செயல்பாடு  Alt + Ctrl + N என்ற கீகளை அழுத்துகையிலும் கிடைக்கும். 
Alt V, O – அவுட் லைன் தோற்றத்தைக் கொடுக்கும். இதே செயல்பாடு Alt + Ctrl + O என்ற கீகளை  அழுத்தினாலும் கிடைக்கும். 
Alt V, P–– ஏறத்தாழ அச்சில் என்ன தோற்றம் கிடைக்குமோ அதே போல தோற்றத்தைக் கொடுக்கும். இதனை எடிட் செய்யலாம்.  Alt + Ctrl +Pஎன்ற கீகளை அழுத்தினாலும் இதே செயல்பாடு கிடைக்கும். 
Alt W, A– ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைத் திறந்து செயல்படுகையில் அவற்றை ஒழுங்குபடுத்தி திரையில் காட்சி தெரியும் படி அமைக்க இந்த கீகளைப் பயன்படுத்தலாம். 
CtrlF6 பல விண்டோக்களைத் திறந்து வைத்திருக்கிறீர்களா? அடுத்த அடுத்த விண்டோக்களுக்குச் செல்ல இந்த கீகளை அழுத்தலாம். இதே செயல்பாட்டை  Alt + Tab ஆகிய கீகளை அழுத்தியும் மேற்கொள்ளலாம்.


பறந்து செல்லும் படுக்கை வரிசைகள்
வேர்ட் டேபிளில் உள்ள  படுக்கை வரிசைகளை, இன்னொரு இடத்திற்கு நகர்த்த என்ன செய்கிறோம். அப்படியே முழுமையாகக் காப்பி செய்து, பின் தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறோம். சில வேளைகளில், கட் செய்தும் பேஸ்ட் செய்கிறோம். இன்னொரு எளிமையான, புதுமையான வழியும் உள்ளது. இதன் மூலம் டேபிள் வரிசை ஒன்றை, அது இருக்கும் இடத்திற்கு மேலேயோ, கீழேயோ மட்டுமல்ல, டேபிள் தாண்டியும் நகர்த்தலாம். இது எப்படி எனப் பார்க்கலாம். 


1.எந்த படுக்கை வரிசையினை, நகர்த்த வேண்டுமோ அதில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். அல்லது நகர்த்த விரும்பிடும் அனைத்து வரிசைகளையும் தேர்ந்தெடுக்கவும்.


2. பின்னர், ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறே, மேல் அல்லது கீழ் அம்புக்குறி கீகளை அழுத்தவும். இப்போது அந்த படுக்கை வரிசை மேல், கீழாக அப்படியே நகர்வதனைப் பார்க்கலாம். இந்த நகர்த்தல் டேபிளோடு நிற்காது. அதாவது கடைசி அல்லது முதல் வரிசைக்கும் மேலாகவும் நகர்த்தப்படும்.  எனவே அப்படியே கொண்டு சென்று அடுத்த பக்கத்தில் உள்ள டேபிளிலும் இதனை இணைக்கலாம்.


3. இந்த செயல்பாட்டினை நெட்டு வரிசைக்குப் பயன்படுத்த முடியாது.

0 comments:

Post a Comment